Category: முதலாளித்துவம்
பொருளாதார நோபல் 2025 – விமர்சனப் பார்வை
அறிவியல் வளர்ச்சியின் மீது முதலாளித்துவம் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி, நிலையான, அனைவருக்கும் பயனாகும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்தை அடைய நமக்கு உதவுவது மார்க்சிய கோட்பாடு மட்டுமே. [நோபல் பரிசு வென்ற] ஷும்பீட்டரியன் கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சுரண்டலை தீவிரப்படுத்தும் கொள்கை மட்டுமே!
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்
முதலாளித்துவ விமர்சகர்களும், அதன் ஊதுகுழல்களாக இருப்பவர்களும், எப்போதும் பொது வேலைநிறுத்தங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை பரப்புவதன் மூலம், அதன் பார்வையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளனர்; அவர்களில் பாதி பேர் அதன் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்புகையில், மீதமுள்ளவர்கள், அதனால் “பாதிக்கப்பட்ட” ஏழை மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்து புலம்புகின்றனர். அவர்களின் பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்குமான ஒரே பதிலாக அமைவது, வர்க்க உணர்வின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் வர்க்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதேயாகும்.
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்
ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத்துவா சித்தாந்தம், முதலாளித்துவ சார்பு மற்றும் பெருமுதலாளிகளின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ஆர்எஸ்எஸ் “இந்து சமூகத்திற்கு” தான் சேவை செய்வதாக பிரச்சாரம் செய்தாலும், அது உண்மையில் இந்து பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்குத்தான் சேவை செய்கிறது; சாதாரண இந்து தொழிலாளி அல்லது விவசாயியின் நலன்களுக்கு அல்ல.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



