Category: மதம்
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.
கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்
ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.
காந்தியும் மதமும்
காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


