Category: தத்துவம்
கூபாவில் மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியர்!
கூபா (CUBA) நாட்டின் தலைநகரம் ஹவானாவில், இடதுசாரி கட்சிகள் நடத்தும் தத்துவ இதழ்களின், மூன்றாவது சர்வதேச கூட்டம் கடந்த அக்டோபர் 15 முதல் 17 வரை கூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் (தமிழ்) மாத இதழ் ஆசிரியரும், சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் உ. வாசுகி அவர்கள் பங்கேற்றார். “ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு சிந்தனைகளும், அவற்றிற்கு உள்ள சவால்களும்” என்ற தலைப்பிலான
மார்க்சிய ஆய்வு தடத்தில் இந்திய, தமிழக தத்துவங்கள்
என். குணசேகரன் இந்திய, தமிழக தத்துவ சிந்தனை, ஆன்மீகம், இறையியல், மற்றும் கடவுள் சார்ந்ததாக மட்டும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “இந்திய தத்துவம் எனப்படுவது, சாரம்சத்தில் ஆன்மீக தத்துவமே” என்று இந்திய தத்துவத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அதனைப் பின்பற்றி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் பரிணமித்த பன்முக தத்துவ சிந்தனைகள் முழுவதையும் ஆன்மீக சிந்தனைகளாக சித்தரிக்கும் நடைமுறை நீடித்து வந்தது. ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்கள், மதக் கோட்பாடுகள் போன்றவையே தமிழக
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மத்தியகட்சிகல்விபாடக்குறிப்பு (பகுதி -4)
4. வரலாற்று அணுகுமுறை வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்) தோற்றம்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

