Category: மார்க்சிய சொல்லகராதி
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது. தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளவும் செய்தன. தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம் – பாட்டாளி வர்க்கம்
சொல்லகராதி: ஐக்கிய முன்னணி உத்தி
“பாசிச எதிர்ப்புப் பொது போராட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்கள் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பரந்த பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது அவசியம்”. இவ்வாறான ஐக்கிய முன்னணி அமைப்பது, பிற்போக்குடன் மேற்கொள்ளும் சமரசம் அல்ல; மாறாக அதை எதிர்க்கப் பரந்த சக்திகளைத் திரட்டும் வழிமுறையாகும்.
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட, உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



