Tag: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
தமிழ் ஒலி பதிவாக ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் அத்தியாயம் (Audio Book)
பிப். 21, சிவப்பு புத்தக தினத்திற்கான சிறப்பு ஆடியோ பதிவு. அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிப்போம், பரவலாக்கிடுவோம்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை
“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்; இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.”
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்
1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டு, முதலாளித்துவம் அங்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் 2008இல் துவங்கி முடிவின்றி தொடரும் உலக முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் மானுடத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றமும் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கும் மானுடத்தின் எதிர்காலத்திற்கும் எதிரியாக முதலாளித்துவம் நிற்கிறது என்பதை நாளும் பளிச்சென்று உணர்த்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
