Category: அரசியல்
புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!
கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்ட்டோர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர் வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.
கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!
கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.
பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நூறாண்டுகள்
தொடக்ககால கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணிகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தங்களுக்காகவும் தலித்துகளின் விடுதலைக்காகவுமான சாதிய எதிர்ப்புப் போராட்டங்களாகவே இருந்தன. மிக அதிகமான வகையில் ஒடுக்கப்பட்டுவந்த சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேல்மட்ட சாதிகளிடையே பெண்களின் அவமானகரமான அந்தஸ்து குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கேரளாவில் நம்பூதிரிகளிடையே இ எம் எஸ் தலைமையிலான இயக்கம் அவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

