Category: கல்வி
புனையப்படும் பொய் ‘வரலாறு’!
அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது. ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?
இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன.
கல்வியும் கம்யூனிஸ்டுகளும்
கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. இரு வேறு கல்வி முறை கூர்மையாக பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தித் துறைக்கு மாறாக, வணிக, சேவைத் துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு செயல்படத் தொடங்கியது. இத்தகைய தாராளமய, தனியார்மய பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலன்களை தந்தது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
