Category: இந்தியா
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல…
வரலாற்று ரீதியாக ஒரு நிறுவனரால் தொடங்கப்பட்டு அதன் பிறகு ஒரு நேர்க்கோட்டு வகையில் உருவான ஆபிரஹாமிய வகைப்பட்ட மதங்களில் இருந்து (அதாவது யூத மதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவை ஆபிரஹாம் என்பவரின் வம்சாவழியாக வந்தது என்ற கருத்தை வலியுறுத்துவது) முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இந்து மதம் இருந்து வந்தது என்பதை நாம் இங்கு அங்கீகரிக்க வேண்டியது அவசியம். இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை அதற்குக் கொடுத்து, இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவருக்கும் அதை ஒரே மாதிரியாக அமல்படுத்த முயற்சித்து வரும் இந்துத்துவா தத்துவத்தின் இந்த முயற்சியானது காலனிய வகைப்பட்ட சிந்தனை வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு முயற்சியே ஆகும்.
உலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல்
உலகமயமாதலின் கூடவே கஷ்டப்பட்டு வென்ற தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் நடக்கின்றன. விற்பனைத் துறை, கடைகள், துணி உற்பத்தி, வாகன உற்பத்தித் துறை போன்ற பிற துறைகளில் பெண்கள் கடும் ஒடுக்குமுறையையும் மோசமான வேலைச் சூழலையும் சந்திக்கின்றனர். ஊதியம் சார் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர்.
சிறு குறு தொழில்களே நெருக்கடிக்கான தீர்வு
மோடி அரசு பெரும் கார்ப்பரேட்கள் நலனில் மட்டுமே அக்கறையோடு செயலாற்றுகிறது. இந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் 63 பெரும் பணக்காரர்களுக்காக கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கடன் தள்ளுப்படி, வரிச்சலுகைகள் என வழங்கியுள்ளது. ஒரு பகுதி பன்னாட்டு கம்பெனிகளில் பொருளாதார நெருக்கடி என்ற உடன் நிதிச் சந்தையில் தங்களது முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
