Tag: அமெரிக்கா
தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!
கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு
அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்
மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டு கிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண் ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்ற மென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை பூசி மொழுகி காட்டுவதுதான்.
வெனிசுலா தேர்தலும் – வர்க்கப் போராட்டமும்
உலகமே ஆவலோடு எதிர்பார்த்த வெனிசுலா நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஏப்ரல், 14, 2013 அன்று நடந்து முடிந்தது. இந்த உலகளாவிய ஆவல் டி.வி சீறியல் தொடரின் முடிவை அறிகிற ஆவல் ரகமல்ல! ஆவலில் ஒரு அதிசயம் அடங்கியிருந்தது. அமெரிக்கா உட்பட எல்லா உலக நாடு களிலும் மக்கள், இரு கூறாக நின்று எதிரும் புதிருமான தேர்தல் முடிவிற்கு ஆசைப்பட்டது தான் இந்த ஆவலில்லிருந்த அதிசயமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


