Tag: மார்க்சிஸ்ட் கட்சி
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக … 7 வது ஆசிய பசிபிக் பிராந்திய கியூப ஆதரவு மாநாடு …
அமெரிக்காவின் தடைகளால் கியூபாவின் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைகள் இருந்தாலும் கியூபா சோசலிச பாதையில் உறுதியாக நின்று கொண்டே பல சாதனைகளைப் படைத்துள்ளது. உலகத்தில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கூட கியூபா சோசலிசத்தினை வலுப்படுத்தியுள்ளது.
இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் … 2
இடது ஜனநாயக அணியைக் கட்டிட வேண்டும் என்று தீர்மானம் விரிவாகக் கூறுகிறது. இது தேர்தலுக்கான அணி அல்ல. வர்க்க பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வர்க்க அணி. இந்தக் கட்சி சரியில்லை, அந்தக் கட்சி பரவாயில்லை என்பதல்ல பிரச்னை. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் திட்டம் என்ன, அதற்கு மாற்றாக இடது ஜனநாயக அணி வைக்கும் திட்டம் என்ன என்பது தான் முக்கியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



