Tag: மார்க்சிஸ்ட்
அக்டோபர் புரட்சியின் நினைவுகளில்…
லெனினுடைய ஆய்வறிக்கைகள் கட்சியின் செயல்பாட்டுக்கான திட்டமாக ஏற்கப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கைகள்தான் மென்ஷ்விக்குகளுடன் இணைந்து கொள்ளும் நடவடிக்கையை தடுத்தது. தற்காலிக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தது. தாராள நாடாளுமன்ற குடியரசை அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கச் செய்து, கட்சியை காத்தது.
2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!
போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !
வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

