Tag: ரஷ்யா
by EditorialFebruary 10, 2006
லெனின் வாழ்வும் – சிந்தனையும்!
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து, அவர் காலம் ஆனார் என்ற தலைப்பில் முடித்துள்ளார்! மொத்தம் 38 தலைப்புகள்!!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
