Tag: வியட்நாம்
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.
கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமும் II
மார்க்சிஸ்ட்டின் செப்டம்பர் மாத இதழில் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுவதைப் பற்றிய சில அம்சங்களை குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பாக தொழிலாளி வர்க்கமும் இன்றைய உலகில் முதலாளித்துவ சுரண்டலையும், ஆட்சிகளையும் நேரடியாக அன்றாடம் எதிர்த்துப் போராடக் கூடிய வர்க்கம் என்ற முறையில் சமுதாய வளர்ச்சியில் ஒரு தனிப்பாத்திரத்தை நிறைவேற்றுகிறது என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!
வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
