Category: அரசியல்
குழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’
கம்யூனிசத்தின் நூற்றாண்டு, ‘கலக்கத்தோடு தொடங்குவதாக’ கட்டுரையாளர் நிறுவ முயல்கிறார். இன்று கலக்கத்தில் இருப்பது கம்யூனிஸ்டுகள் அல்ல, முதலாளித்துவமே மீள முடியாத தன் நெருக்கடியைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. மனித குலத்தின் எதிர்காலத்தைக் காட்டுகின்ற ஒளிவிளக்காய் மார்க்சிய இயக்கம் ஜொலிக்கிறது.
அடிமைச் சங்கிலியைத் தகர்த்த தாதா அமீர் ஹைதர் கான்
அமீர் ஹைதர் கான் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை உணர்ந்த ஒரு போராளியாக இயங்கினார். பயணித்த இடத்திலெல்லாம் தன் முத்திரையைப் பதித்தார். இந்திய துணைக்கண்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவி வளர்ந்ததில் அமீர் ஹைதர் கானின் பங்களிப்பு அதி முக்கியமானது.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்
அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


