Category: மார்க்ஸ் 200
மார்க்சின் இறுதி ஆண்டுகள்
நாம் சோகத்தில் ஆழ்வதற்குப் பதிலாக, மறைந்த தலைவரின் உணர்வின்படி செயல்படுவோம். அவர் நமக்குக் கற்பித்ததையும், ஆசைப்பட்டதையும் கூடிய விரைவில் நிதர்சனமாக்க, அனைத்து வலுவுடனும் நாம் போராடுவோம். இந்த வழியில் அவரது நினைவைப் போற்றுவோம்! மிகுந்த அன்பிற்குரிய நண்பரே! நீங்கள் எங்களுக்குக் காட்டிய பாதையில் இறுதிவரையில் நடைபோடுவோம். உங்கள் கல்லறையில் அதை உறுதிமொழியாக அளிக்கிறோம்!
தோற்கடிக்கப்பட்ட புரட்சியின் படிப்பினைகள்
தமிழில்: பாலச்சந்திரன் 26 ஆகஸ்ட் 1849 ல், மார்க்ஸ் ஆங்கிலேய மண்ணில் காலடி வைத்தபொழுது லண்டன் மாநகரம், இருபது லட்சத்திற்கும் மேலான மக்கள்தொகை கொண்டதாகவும்,உலகிலேயே மிகப் பெரிய நகரமாகவும், உலகின் ‘தொழிற்பட்டறை’யாகவும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. 1848 ம் ஆண்டின் வசந்த காலத்தில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் விரிவாக்கத்திற்காக, சார்டிஸ்ட் இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, ஐரோப்பிய புரட்சி, இங்கிலாந்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த இயக்கம் மிகப் பெரிய
மார்க்ஸ் 200: உபரிமதிப்பும், அன்னியமாதலும் …
மார்க்சின் புரட்சிகரத் திட்டத்திற்கும் பொருந்துகிற உண்மை இது. முதலாளித்துவத்தின் முழுமையை, ஏகாதிபத்தியத்தையும் உள்ளடக்கி நாம் காணும்போதுதான் புரட்சிக்கான வாய்ப்புகளும், சாத்தியங்களும் மிகவும் அதிகமாகின்றன; வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் வர்க்க புரட்சியைப்பற்றி மட்டும் நாம் பேசாமல் முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளிலும் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் அடிப்படையில் ஜனநாயக புரட்சியை, சோசலிசம் நோக்கிய கட்டமாக வகுத்தெடுக்க முடிந்துள்ளது. தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை என்ற கருதுகோளை லெனின் முன்வைத்ததற்கான பின்புலமாக, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியை, தாமதமாக தான் அடியெடுத்து வைத்த நாடுகளில் முதலாளித்துவத்தால் நிறைவேற்ற முடியாத இயலாமையே இருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

