Category: புரட்சியின் நூற்றாண்டு
நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!
உலகப் புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் கடந்த நூற்றாண்டுகளில், உலகைக் குலுக்கிய ‘இரண்டு’ பத்து நாட்கள் உள்ளன: அவை ஜான் ரீட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு சுட்டுவதைப் போல அக்டோபர் புரட்சியின் 10 நாட்களும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநாடு நடந்த நாட்களும் (1956, பிப்ர வரி 14-25). அதிரடியாகவும், திரும்பப் பெற முடி யாத வகையிலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முன், பின் என்று குறிப்பிடும் வகையில் (புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றை) மாற்றிவிட்டன. வர லாற்றின் எந்த முக்கிய நிகழ்வும் இதற்கு ஈடாக எந்த நிகழ்ச்சியையும் என்னால் சிந்திக்க முடிய வில்லை. சுருக்கமாகச் சொன்னால், அக்டோபர் புரட்சி, உலக கம்யூனிச இயக்கத்தை உருவாக்கியது, 20 ஆவது மாநாடு அதனை தகர்த்தது”.
கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள்
– பெனடிக்ற் பாலன் “ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதுமாளிப் பட்டமளிப்பு ஆய்விற்க்காக லெனினது கல்வி சிந்தனைகளை தேர்ந்தெடுத்து, அந்த ஆய்வு ஒரு நூலாக வெளிவந்துள்ளது. “லெனினது கல்விச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் அதனை வெளியிட முடிவெடுத்துள்ளது. அவர்களின் அனுமதியோடு, கல்வியும் பண்பாடும் பற்றி லெனினது கருத்துக்களை அலசும் பகுதியை இங்கே வெளியிடுகிறோம். “சோவியத் கல்வி முறை” என்பது உலக நாடுகளுக்கே வழிகாட்டியாக இருந்தது. இன்றும் இருக்கிறது என்பதை மறுப்பவர்கள்
நவம்பர் புரட்சிக்குப் பின்….
விரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜார்ஜ் லூகாஸ் நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


