Author: Editorial
ஆணாதிக்க பிற்போக்கு சித்தாந்தங்களும், தொடரும் ஏற்றத்தாழ்வுகளும்
சுபாஷினி அலி சித்தாந்தங்கள் – நாம் சிந்திக்கும், விளங்கிக் கொள்ளும் வழிகள் – எங்கிருந்தோ திடீரென முளைப்பதில்லை. அவை நம் சூழ்நிலைகளின், வரலாற்று-சமூக உண்மை நிலைகளில் இருந்துதான் விளைகின்றன. நாம் முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், ஒன்று, அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை வலுப்படுத்தவும் நிலையானதாக ஆக்கவும் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன; அல்லது அவை சுரண்டல் நிறைந்த சமூக-பொருளாதார அமைப்பை தூக்கி எறிவதற்காக உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, பரப்பப்படுகின்றன. இந்த கட்டுரை எண்ணிலடங்கா வேறுபாடுகளைக் கொண்ட பிற்போக்கான
பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்
பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தமிழில்: வயலட் நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக்
மநுவாத பொருளாதாரமும், இந்து வலதுசாரிகளும்
கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முட்டி மோதிப்பார்த்தனர். அதே சமயம் இந்த நிதியறிக்கையை உற்று நோக்கும்பொழுது, இந்த அரசின் பொருளாதாரப் பார்வை கார்ப்பரேட் மூலதனத்தின் நலன்களை முன்னிறுத்துவது தெரிகிறது. மேலும், இந்த அரசின் கொள்கைகளை பார்ப்பனீயம் வழிநடத்துவதும் புலப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

