Author: Editorial
வரலாற்றைத் திரித்து வழங்குதல்!
பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.
நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்
டாக்டர் ஹேமலதா, தலைவர், இந்திய தொழிற்சங்க மையம் 1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980–களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின.
மேற்குவங்கத்தில் பிரம்மாண்டவாசிப்புஇயக்கமும், அனுபவமும்
(மேற்குவங்கத்தில் நடைபெற்ற கட்சித் திட்டத்தின் மீதான வாசகர் வட்ட இயக்கத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை) சிரிதிப்பட்டாச்சார்யா மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசாங்கமும் கட்டவிழ்த்துட்டுள்ள பாசிச அடக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஜனநாயக மீட்புக்கான போராட்டத்தின் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு தனது கட்சிஅணிகளுக்கு கட்சி அரசியல்கல்வியை தீவிரமாகப் பயிற்றுவிப்பதென முடிவு செய்தது. புரம்மோத் தாஸ்குப்தா கல்விமையத்தில் நிரந்தர கட்சிப் பள்ளி மாநிலஅளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் தொடர்ச்சியாக மாநிலஅளவிலான வகுப்புகள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



