Author: Editorial
மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு – பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்?
கேள்வி: அகிலன், ஈரோடு. பதில்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் பாஜக அரசுக்குமான உறவு தற்போது நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே. மாநில அதிகாரத்துக்கு வந்தவுடனே இந்துத்துவத்திற்கு உதவி செய்திடும் மாற்றங்களை பாடத்திட்டத்தில் ஏற்படுத்திட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈடுபடத் தொடங்கியது. கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அபத்தங்களையும், கற்பனையை வரலாறாக்கியுள்ளனர். பத்ரா என்றொரு அபத்தஜீவியின் வழிகாட்டுதலில், குஜராத் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் சில பத்திகளை வாசித்தால் அபத்தத்தின் அளவுகோல் புரியும். “இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள் தங்கள் யோகக் கல்வியின்
ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் – வெளிப்படும் கோர முகம்!
இஸ்லாமிக் ஸ்டேட் என்னும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில், பிரிட்டானியர்களும், ஜெர்மானியர்களும் சேருகின்றனர், என்ற செய்தியை ஊடகங்கள் தொடந்து வெளியிடுகின்றன. ஆனால் இந்துத்துவா பயங்கரவாதம் தன் பயங்கரவாதச் செயல்களுக்கு, ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது, என்பதை எந்தவொரு மைய ஊடகமும், பெரிய செய்தியாக ஆக்கிடவில்லை. காரணம் இன்றைய அரசியல் சூழலில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு, பின்புலமாக அமைந்துள்ள இந்துத்துவக் கோட்பாட்டை பின்பற்றுவோர், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாகும். கேரவன் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியர்குழு உறுப்பினர், லீனா கீதா ரெங்கநாத் பயங்கரவாதச்
முறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்!
ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரம் என்றரால் என்ன? என்ற தலலைப்பில் தோழர். சீத்தாராம் யெச்சூரி மேற்கொண்ட ஆய்வு, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘மோடி அரசாங்கம்; வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. இந்துத்துவத்தை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்கும் பணியில் தோழர்களுக்கு உதவிடும் அந்த ஆய்வின் சுருக்கத் தழுவலை இங்கே வழங்குகிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய ‘இந்துத்துவ’ சித்தாந்தம் இந்து மதத்தை மேம்படுத்தும் எந்த சேவையையும் செய்ததில்லை. மாறாக மத அடையாளத்தைக் கொண்டு தன்


