Author: Editorial
தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!
“தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”
மகத்தான அக்டோபர் புரட்சி: மானுட வரலாற்றில் திருப்புமுனை
தனியாக, உடைமை அடிப்படையில், உற்பத்தியை நிர்வகிப்பதாக சொல்லிக் கொண்டு உழைப்பை சுரண்டும் முதலாளி வர்க்கம் அவசியம் இல்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்திய புரட்சி அக்டோபர் புரட்சி. எனவேதான் உலகளவில் முதலாளி வர்க்கம் அதனை பூண்டோடு அழிக்க முயன்றது, இன்றும் அந்த முயற்சி தொடர்கிறது. அது தோற்கும். அக்டோபர் புரட்சி விதைத்த சோசலிச கனவுகள் நனவாகும்.
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!
1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



