Author: Editorial
அதானி ஊழல், குற்றவாளிக் கூண்டில் கார்ப்பரேட்-இந்துத்துவா அரசு!
பொதுத்துறையை நாசமாக்கி அடிமாட்டு விலைக்கு விற்க வெறிபிடித்து அலையும் ஒன்றிய அரசு அதற்குப் பதில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் வருடம் தோறும் ஈட்டும் உபரிகளை ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மக்கள் நல முதலீடுகளுக்கும் பயன்படுத்த மறுக்கிறது?
’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்
பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன்.
மதங்களும், அரசியலும் – ம.சிங்காரவேலர்
இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
