Author: Editorial
’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்
அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
சர்வதேசியஒருமைப்பாடுதான் நம்மை மேம்படுத்தும் – அலெய்தா குவாரா
உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதரென்றாலும், அவருடன் ஒருமைப்பாடு பாராட்டுவதென்பது, கியூப மக்களுக்கு புரட்சி கற்றுத் தந்த அழகான விஷயங்களில் ஒன்று. உதாரணமாகச் சொன்னால், பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், எபோலாவை ஒழிக்க வேறொரு நாட்டிற்குச் சென்று பாடுபடுவதைப் பார்ப்பது எவ்வளவு பூரிப்பாக இருக்குமென்பதை விவரிப்பது கடினம்.
இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !
சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன… மதவெறியை குணப்படுத்துவதில் மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் ஒத்ததாக வேறு எதுவும் இல்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


