ஒரு புரட்சிகரக் கட்சிக்கான உறுப்பினர்களின் தரம் !
கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கணக்கில் கொள்ளாமல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பை மட்டும் கணக்கிட்டு, அதுதான் கட்சி விரிவாக்கம் என்று விளக்கிவிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் அரசியல், ஸ்தாபன உணர்வு மட்டத்தை உயர்த்துவதும், உறுப்பினர் தரத்தை உயர்த்துவதுமே முக்கியமான கடமையாகும்.
வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.
இந்திய வரலாற்றில் இஸ்லாம்
இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
