கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்
கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச் செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகள் குறித்து…
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முன்னுரைகளும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு மிக முக்கியமான பாடங்களைத் தருகின்றன. அறிக்கையின் ஒரு பகுதியாகவே அவற்றையும் படிக்க வேண்டும். பொதுவான ஒரு வாசகர் இதுபற்றிச் சொல்லும்போது, கம்யூனிஸ்ட் அறிக்கையை ‘ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அனுபவம் வழங்குகிறது’ என்பார். உண்மைதான் அறிக்கையின் இலக்கியத் தரமும் பொருள் பொதிந்த முன்னுரைகளும் அத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன.
நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்
மார்க்ஸ் “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை. மார்க்சைப் பொறுத்த வரையில், “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.
