மே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
வரலாற்று சிறப்பு மிக்க தொழிலாளர் தினத்தை உலகமே உற்சாகமாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர்களின் போராட்டக்கனலின் வெளிப்பாடாகவே எழுந்து நிற்கிறது. ஏகாதிபத் தியங்களின் லாப வெறி உழைக்கும் மக்களை மேலும், மேலும் சுரண்டிக் கொழுக் கிறது. எப்போதும்போல் தொழிலாளி வர்க்கமும் அதற்கேற்ற வகையில் எதிர்த்து நிற்கிறது.
ஏகாதிபத்திய தாக்குதலும் உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்
நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க் குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப் படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறு பான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.
மீண்டு வருமா வெனிசுவேலா?
சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


