Tag: இலங்கை
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி – மறுமலர்ச்சிக்கான மக்களின் நம்பிக்கை!
அருண் குமார் இலங்கை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் உலகளாவிய சூழ்நிலையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நாடுகளில் வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்தின் மையத்தை கைப்பற்றுவதைக் காணமுடிகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அண்மைய எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா விமுக்தி
இலங்கை: நெருக்கடியும், படிப்பினைகளும் !
உலகமய, தாராளமய கொள்கைகளை கடைப்பிடித்த பல மூன்றாம் உலக நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. மக்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதால், உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது.
இலங்கைப் பிரச்சனை – ஒரு பார்வை
இலங்கையில் எல்டிடிஈ-யினருக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஆயுத மோதல் துவங்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இரண்டு பக்கமும் பல்லாயிரம் உயிர்கள் பலிவாங்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள் சேதம் நடந்துவிட்டது. இத்துடன் கடந்த சில ஆண்டுகளாக நார்வே தலைமையிலான சர்வ தேசக் குழுவின் முன்னிலையில் பேச்சு வார்த்தைகளும் நடந்துவிட்டது. எனினும் தீர்வு காணப்பட வில்லையே ஏன் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

