Tag: உலகமயமாக்கல்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத் தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா 1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின்
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது. பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை. உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார். இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
