Tag: ஏ.கே.ஜி
தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்!
டிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.
ஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி!
ஏ.கே.ஜி எனும் மூன்று எழுத்துக்களால் நாடெங்கிலும் அறியப்பட்டவர் – ஆயில்லியத்து குற்றியேரி கோபாலன் எனும் ஏ.கே.கோபாலன். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எதேச்சதிகாரப் பாதையில் பயணித்த அவசர கால ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், 1977 மார்ச் 22 அன்று ஏ.கே.ஜி. மறைந்தார்! மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


