Tag: கம்யூனிசம்
மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை
பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.
உழைக்கும் வர்க்க இயக்கமும் பெண்களின் பங்களிப்பும்
இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும் அறியப்படாத திண்டுக்கல் ஆக்னஸ் மேரி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்
(ஏ ஆர் சிந்து, மத்திய குழு உறுப்பினர், சி பி எம்) தமிழில்: ஜி.பாலச்சந்திரன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்: முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

