Tag: ஜப்பான்
வெனிசுலா தேர்தலும் – வர்க்கப் போராட்டமும்
உலகமே ஆவலோடு எதிர்பார்த்த வெனிசுலா நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஏப்ரல், 14, 2013 அன்று நடந்து முடிந்தது. இந்த உலகளாவிய ஆவல் டி.வி சீறியல் தொடரின் முடிவை அறிகிற ஆவல் ரகமல்ல! ஆவலில் ஒரு அதிசயம் அடங்கியிருந்தது. அமெரிக்கா உட்பட எல்லா உலக நாடு களிலும் மக்கள், இரு கூறாக நின்று எதிரும் புதிருமான தேர்தல் முடிவிற்கு ஆசைப்பட்டது தான் இந்த ஆவலில்லிருந்த அதிசயமாகும்.
வடகொரியாவின் அணுச்சோதனை!
பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!
வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


