Tag: திவால்
முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஆழமடையும் இந்திய பொருளாதார நெருக்கடியும்
கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு தினம் ஒரு குழப்பமான அறிக்கைவிட்ட வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன், நம்பிக்கை அடிப்படையில் ரூபாய் மதிப்பு சிறிது அளவு மீட்சி அடைந்துள்ளது. மீட்சி தொடருமா? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? நாம் காணும் நிகழ்வுகள் மக்களை எப்படி பாதிக்கும்? ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள தற்கும் இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றிற்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்குக் காரணம் பன்னாட்டு நிகழ்வுகள்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
