Tag: நிகழ்வுகள்
அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை
கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது.
காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது
வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.
விடுதலை75: நவீன இந்தியாவின் அடிப்படைகளைக் காப்போம் !
இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
