Tag: நிகழ்வுகள்
இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?
சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.
பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?
சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.
வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?
சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



