Tag: பாரம்பரியம்
மாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …
காலனிஆதிக்க காலத்தில், இந்தியப் பண் பாட்டை, சாதி, மதம் இவற்றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தார்கள். ஒருபொதுப் பண்பாடு, இவ்வாறு புகுத்தப்பட்டது. இந்தப் பிரிவுகள் நமக்குள்ளேயும் ஊறிவிட்டன. இந்தப் பிரிவுகளுக்குள், மேல்தட்டுப் பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அடிமட்ட மக் களின் கலாசாரத்தோடு தொடர்பு கொள்வதே தடைபட்டது.
பாரம்பரியத்தின் கட்டமைப்பு …
கலைகளைப் பொருத்தவரையில் பெண்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது அவர்கள் ஒரு தொழிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தத் தொழில் சமுதாயக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட தங்களுக்கே உரித்தான ஒரு சமூகத்தின் கருவை உருவாக்கிக் கொண்டார்கள். பெளத்த, சமணப் பெண் துறவிகளின் குழுக்கள் மேற்கூறிய தேவதாசிகளின் குழுக்களில் இருந்து மாறுபட்டவை.
மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்
உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



