Tag: பிரபாத் பட்நாயக்
ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !
ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது.
கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்
கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.
முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
