Tag: பி.சீனிவாசராவ்
மகத்தான தோழர் சீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக உழைப்பாளி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, இரவும் பகலும் பாராமல் ஓய்வின்றி உழைத்து, பாதிநாள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தலைவர், போராட்டப் பொறுப்பை ஏற்று 15 நாட்கள் ஓய்வின்றி தமிழகம் முழுவதும் அலைந்த போராட்ட தளபதி பிஎஸ்ஆர் 30-9-1961 அன்று அமரரானார்
சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு. இந்தியாவின் பிரத்யேகத் தன்மை: ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற
தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்!
டிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



