Tag: பொருளாதாரம்
அநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நவீன முதலாளித்துவ அமைப்பு முறையை மிகவும் கவனமாக கார்ல் மார்க்ஸ் ஆய்வு செய்துள்ளார். முதலாளித்துவ அமைப்பு முறையின் தரம் தாழ்ந்த பண்பைப் புரிந்து கொண்ட அவர் – அதற்கு அநாகரிகப் பொருளாதாரம் என்று பெயர் சூட்டினார். அந்த அநாகரிகப் பொருளாதார அமைப்பு முறையால் மீண்டும் மூழ்கடிக்கப்படும் நிலையில் இன்றைய தினம் இந்தியா இருக்கிறது.
ஏகாதிபத்தியமா? பேரரசா?
உலக உழைப்பாளி மக்களின் நலன்களுக்கு எதிரி, எகாதிபத்தியம். இதனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சோசலிச லட்சியம் கொண்டோர் அனைவருக்கும் பிரதான எதிரியாக ஏகாதிபத்தியம் விளங்குகிறது. அதன் உலகளாவிய ஆதிக்கத்தையும், பொருளாதார அதிகாரத்தையும் ஒழிப்பது தான் கம்யூனிஸ்ட் டுகளின் லட்சியம். சோசலிசத்தின் உதயமும், எகாதிபத்தியத்தின் அழிவும் ஒன்றாகவே நிகழக் கூடியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

