Tag: வெங்கடேஷ் ஆத்ரேயா
இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி
மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.
சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்
ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.) கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்
மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
