Tag: வெனிசுலா
புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்
முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார். உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுப்பது. மேலை நாட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி என்று கூறப்படுகிற நாடுகளில் இருப்பதைப்போல்.பணக்காரர்களின் அரசு ஏழைகளை ஆட்சி செய்வதல்ல.
லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 3
கடவுளையே ஒரு குடிமகனாகக்’ கொண்ட காலனியாதிக்க சக்தியான ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் பலவற்றுக்கும் தலைமை தாங்கிய நாடோடிப் புரட்சியாளர் சைமன் பொலிவார்
வெனிசுலாவில் நிலச் சீர்திருத்தம்!
வெனிசுலா நாட்டு கிராமப் புறங்களிலே பிரபுத்துவ பண்ணை முறையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அரசு ஆதரவுடன் நிலச் சீர்திருத்தங்கள் தற்போது அமலாகி வரும் நாடு வெனிசுலா மட்டுமேயாகும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏராளமான தரிசாகக் கிடக்கும் தனியார் பண்ணை நிலங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் இயக்கம் நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். மேலும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான உணவில் தன்னிறைவு பெறவும், வேளாண்மை லாபகரமாக இருக்கவும் தேவையான வகையில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது வேளாண் சீரமைப்புக் கொள்கையில் உள்ளடங்கிய அம்சங்களாகும். வேளாண் துறையில் மாற்றங்களை நிர்வகிக்கவும், தொழில் நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நில உடமையில் கூட்டுறவு அமைப்பை உருவாக்குவது என்பது தற்போதைய கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



