Category: அரசியல்
சங் பரிவாரத்தின் உத்திகள்!
வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.
ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?
காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள்.
தொழிற்சங்கம் அமைத்தல் அமெரிக்கா மற்றும் இந்திய அனுபவங்கள்…
முதலாளித்துவம் தான் உற்பத்தி செய்யும் சரக்கின் விலையை சந்தையில் தீர்மானிக்கிறது. குறைவான விலைக்கு விற்கும் முதலாளி சந்தையில் வெற்றி கொள்கிறார். அதற்காக சரக்கு உற்பத்திக்கான அடக்க செலவை குறைக்கிறார். அது பெரும்பாலும் உழைப்பு சக்தியின் விலையை குறைப்பதாக அமைகிறது. அதன் மூலம், சரக்கின் விலையை குறைத்து சந்தையில் போட்டியிட முடிகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



