Category: இதழ் பெட்டகம்
கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து!
டெல்லியில் வருகிற 6 – 11, 2005 இல் நடைபெறவுள்ள கட்சியின் 18-வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் மற்றும் ஸ்தாபன அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் 2002 இல் நடைபெற்ற கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அரசியல் – பொருளாதார நிலைமையை பரிசீலித்து, எதிர்கால அரசியல் அணுகுமுறையையும், எதிர்கால கடமைகளையும் உள்ளடக்கி அரசியல் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்ற உள்ளது. மேலும் 17வது மாநாடு
காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்
மத்திய அரசு டிசம்பர் 2004ல் ஒரு அவசர சட்ட பிரகடனத்தின் மூலம் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970ல் (3வது – திருத்த) மசோதாவை பிறப்பித்துள்ளது. இப்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை ஒரு சட்டமாக கொண்டுவர மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மருந்து, இரசாயனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துத் துறையை பொறுத்தவரையில் இதுவரை பின்பற்றி வந்த செய்முறை காப்புரிமை பொருள் காப்புரிமையாக மாற்றப்படும்.
மூன்று ஆட்சிகளை கண்ட தமிழக மக்களின் பொருளாதார நிலை!
காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையால் துன்புற்ற தமிழக மக்கள் 1967இல் திராவிட முன்னேற்ற கழகத்திடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அதன்பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தி.மு.க., அதிமுக இவ்விரு கட்சிகளிடையே உள்ள பகைமையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவ்விரு கட்சிகளிடையேயும் நெருங்கி ஆராய்ந்தால் மட்டுமே தெரியக்கூடிய சில ஒற்றுமைகள் உண்டு. இருவருக்கும் பொரளாதார கொள்கையில் வேற்றுமை கிடையாது. வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. ஜனநாயக உரிமைகள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
