Category: இதழ் பெட்டகம்
முதலாளித்துவத்தின் கோர வடிவம் = நரேந்திர மோடி
மக்கள் கவி பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் இல்லையே என்ற ஏக்கம் தற்போது எழுகிறது. ஏனெனில் மக்களை பிடிக்கும் நவீன பேய்களுக்கு தாயத்து விற்றவன் ஆயிற்றே. இப்பொழுது இந்திய முதலாளி வரக்கம் நமது மக்களின் இரண்டு பேய்களை முன்னிருத்துகிறது. இரண்டு பேரும் மக்களின் வாழ்வை சூறையாடும் கொள்கைகளை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அமல்படுத்தும் எத்தரகள். நம்மூரில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டினால் அதற்கு பொதுவாக வைக்கப்பட்டுள்ள பெயர் மோடி மஸ்தான் வேலை. தற்போது இந்திய அரசிலுக்கு இதைவிட கணக் கச்சிதமாக பொருந்தும் வேறு பெயர் இல்லை.
புரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்
ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சி 2012 டிசம்பர் 15-16 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்-இன்றும் நாளையும் என்ற தலைப்பில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் மீது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உலகில் தெரிவு செய்யப்பட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. உலக நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து விவாதிப்பதற்காக இச்சந்திப்பு நடைபெறுவதாக ரஷ்ய சம்மேளனக் கம்யூனிஸ்ட் கட்சியால் மிகவும் ஐயந்திரிபறத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவு உணர்வு பரவ ஒரு நீண்ட பயணம்
“சுயநலத்தைதேடு, பொது நலனை கடவுள் பார்த்துக் கொள்வார்” “தகுதி உள்ளது வாழ, மற்றது அழியும்” என்பன போன்ற வாழ்வியல் போதனைகள், கலாசாரங்கள் மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு தள்ளி கற்பனைக்கெட்டாத சிரமங்களை கொண்டு வந்துவிட்டன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


