Category: இதழ் பெட்டகம்
கம்யூனிசக் கொடியின் கீழ்…
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் தனி வார்ப்புகள்: தனித் தாதுக்களால் ஆக்கப்பட்டவர்கள்; உலகப் பாட்டாளி வர்க்கப் படையின் நேர்நிகரற்ற போர்த்தந்திரியான தோழர் லெனின் அணியில் அங்கத்தினர்கள். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட சிறந்த பெருமை எங்களுக்கு வேறெதுவும் இல்லை. தோழர் லெனினினால் அமைக்கப் பெற்று, அவரது தலைமையில் இயங்கிய கட்சியில், இயக்கிய கட்சியில் உறுப்பினர் என்பதைவிட சிறந்த பெருமை வேறொன்றும் இல்லை.
மருளா? மயக்கமா?
5.10.2006 -ம் தேதியிட்ட தினத்தந்தியில் தேர்தலில் வெற்றி பெற பில்லி சூன்யம் வைத்ததாகச் செய்தி வந்துள்ளது. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியும், நம்மூர் பக்கம் அந்த ஞானம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை என்பதை இச்செய்தி நமக்கு உணர்த்துகிறது. போன நூற்றாண்டில் இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து முதலில் போர்க் கொடி உயர்த்தியவர் சிங்காரவேலர். அரது கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும்!
கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைமையிலான வெகுஜன இயக்கங்களும், ஆளும் வர்க்கம் கொடுக்கக் கூடிய பலதரப்பட்ட தாக்குதல்களையும், இன்னல்களையும் எதிர் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகிறது. மேலும், முன்னேறவே செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த முன்னேற்றத்திற்கான, அடைந்த வெற்றிகளுக்கான பல்வேறு காரணங்களை இங்கு விளக்க தேவையில்லை. சுருங்கக் கூறின், இடைவிடாத முறையில் பரந்து கிடக்கும் மக்களைத் திரட்டுவது, அவர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்தவது, அவர்களின் அரசியல் உணர்வை மேலும், மேலும் வளர்த்து ஒரு மகத்தான மக்கள் சக்தியை தொடர்ந்து திரட்டிக்கொண்டு இருப்பது தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றிகளுக்கு மூலகாரணம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

