Category: கேள்வி – பதில்
கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்?
“மக்கள் ஜனநாயக முன்னணி” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் பேசுகிறது. “இடது ஜனநாயக முன்னணி” பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது அரசியல் தீர்மானம் பேசுகிறது. கம்யூனிஸ்டுகள் ஏன் அதிகமாக “முன்னணி”அமைப்பது பற்றி பேசுகின்றனர்? கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னணிகள் எப்படிப்பட்டவை என்பது மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்திலும், அரசியல் தீர்மானத்திலும் விளக்கப்பட்டுள்ளது. கட்சி திட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி என்பது பல வர்க்கங்களை உள்ளடக்கியதாகவும், அந்த வர்க்கப் பிரிவுகளை எவ்வாறு திரட்ட வேண்டுமென்றும் விளக்கப்பட்டுள்ளது. தொழிலாளி – விவசாயி வர்க்கக்
இடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்?
அன்றைக்கு ஒரு வடிவத்தில் முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது என்றால், இன்றைக்கு அது வேறு பல வடிவங்களில் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அன்று ஆளும் வர்க்கத்துக்குத் தேவை என்ற அடிப்படையில் காங்கிரசின் சர்வாதிகாரம் கோலோச்சியது என்றால், இன்றைக்கு அதே அடிப்படையில் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குகளும், கூடுதலாக மத வெறி நடவடிக்கைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125 வது ஆண்டு சிறப்பு விவாதத்திற்கான கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது?
இந்திய சாதி அமைப்பு இன்னும் ஏன் தொடர்கிறது? சிலர் இதுவொரு நிலப்பிரபுத்துவ தொடர்ச்சி, நிலப்பிரபுத்துவ சிந்தனை என்பார்கள். அப்படியல்ல; நாம் இந்திய முதலாளித்துவம் தன்னை வளர்த்துக் கொள்ளும்போது அத்துடன் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளை வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; தலித் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கு, அது சாதியை தன்னுடைய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



