Category: கேள்வி – பதில்
இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?
வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும்.
டோனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கக் கூடிய சூழல் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும்?
அயல்துறை கொள்கைகளைப் பொறுத்த வரை அவர் பாதை முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். பாரம்பர்யமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்து வந்த சில நிலைபாடுகளில் மாற்றம் வரலாம்.
திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது?
கேள்வி: திராவிட அரசியல் கட்சிகள் பிராந்திய முதலாளிகளின் நலன்களை பிரதிபலிக்கின்றனவா? அவர்களிடம் தற்போது திராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது? டி.கே.ரங்கராஜன் : குறிப்பிட்ட கருத்தியல் என்பது குறிப்பிட்ட காலச் சூழலில் உருவாகிறது. அந்த காலம், தேவை மாற்றம் பெற்று, முடிவடைகின்றபோது வேறு சில கருத்துக்கள் சமூக முரண்பாடுகள் அடிப்படையில் உரு வாகின்றன. வரலாற்றில் ஒரு கருத்தியல் என்றைக்கும் அதே நிலையில் உயிருடன் இருக்க வேண்டுமென்ற அவசியம் இருப்பதில்லை. திராவிட இயக்கம் தோன்றிய காலத்தின் அரசியல், பொருளாதாரச்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


