Category: வரலாறு
தோழர் ஹரிபட்….
சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஒரு ஜிபூம்பா அல்ல…
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு யாருக்கு பயனளிக்கும் என்ற கேள்விக்கு விடை யைத் தேடுமுன் பொதுவாக மேலை நாட்டு அந்நிய முதலீடுகள் பற்றிய ஞானம் தேவைப் படுகிறது.இன்றைய உலகில் பொருளாதாரம் என்றால் பணத்தை பெருக்குவது என்ற பார்வை தான் மேலோங்கி உள்ளது. பணத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சரக்கு களை உற்பத்தி செய்து சந்தை மூலம் லாபம் சம்பாதித்து பணத்தை பெருக்குவது. அடுத்த வழி இப்படி சிரமப்படாமலே பணத்தை பெருக்கும் குறுக்கு வழிகளை தேடி உருவாக்குவது.
பெரியாரின் பார்வையில் பகத்சிங்!
பெரியாருக்கு பகத்சிங் கடவுள் மற்றும் கடவுளின் அருளாட்சி என்பதில் நம்பிக்கை கொண்டவரல்ல என்றும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்றும் தெரியும். 1929 ஏப்ரல் 9ம் தேதி பகத்சிங் தேசிய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையிலிருந்து அவர் ஒரு தேசிய மாவீரனாக கருதப்பட்டார். அதுவரைக்கும் அவர் நவ்ஜவான் பாரத் சபாவின் ஒரு சிந்தனா சக்தி படைத்த வாலிபன் என்றே அவரைச் சுற்றியிருந்த பஞ்சாப் வாலிபர்கள் நினைத்தனர். மேலும் பகத்சிங் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இயக்கத்தின் மிகப் பெரும் தத்துவவாதியாகவும் – தலைமறைவு இயக்கத்தின் மத்தியில் அவர் ஒரு புரட்சிவாதியாகவும் எண்ணப்பட்டார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


