Author: Editorial
அரசியல் வரலாற்றில் ஓர் திருப்புமுனை
இந்தியக் குடியரசின் இரண்டாவது பொதுத் தேர்தல் முடிவுகளில் உலகின் கவனத்தை ஈர்த்த முடிவாக அமைந்தது, புதிய மாநிலமான கேரள மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் நாட்டின் ஓர் மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பை, கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்வது என்பது, முதலாளி வர்க்கத்தினருக்கு மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்குமே புதிய அனுபவமாகும். முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அதே அமைப்புக்குள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் செயல்படும்படி மக்கள் தீர்ப்பளித்தனர்.
லெனினியத்தின் மையக் கரு
“புரட்சி எதார்த்தம்” என்ற லெனின் கண்ணோட்டம் சரியான புரட்சிக்கான நடைமுறையையும், கோட்பாட்டையும் உருவாக்க அடித்தளமிட்டது.
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்
முந்தையக் கட்டுரைகளில் கருத்துப் போராட்டம் அல்லது தத்து வார்த்தப் போராட்டம், கட்சி செய்ய வேண்டிய ஆகப்பெரிய கருத்துத்துறைப் பணிகளின் ஒரு முக்கியப்பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். அதாவது வாதத்திற்கு எதிர்வாதம் எனும் முறையில் சொற்றொடர்களை வைத்து ‘திண்ணை வேதாந்தி’களைப்போல் தர்க்கம் பண்ணுவது தத்துவார்த்தப் பணியின் நோக்கமாக இருக்க முடியாது. எதிரி வர்க்கங்கள் – கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய சக்திகள் தொடர்ந்தாற்போல் கம்யூனிஸ்ட் அணிகளை சீர்குலைக்கும் பணியில் ஈடுபடும் என்பதை சுட்டிக் காட்டினோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



