Author: Editorial
கிரகங்களும் கிரகசாரங்களும்!
கிரகங்கள் எட்டு ஒன்பதல்லஎன்று விஞ்ஞானிகள் முடிவு செய்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். ஏன் இந்த பரபரப்பு? உலகநாடுகளின் தொண்மை வரலாறு நமக்கு இதை தெளிவாக்குகிறது. எல்லா நாடுகளிலும் நாகரீகத்தின் துவக்கம் என்பது வானத்தை மானுடன் ஆய்வு செய்யத் துவங்கிய பிறகே ஏற்பட்டுள்ளது. மேலே உள்ளதுபோல் கீழே என்றுதான் நமது முன்னோர்கள் கற்பனை செய்து இருக்கிறார்கள். வானத்தில் கண்ணில் படுபவைகளும், கற்பனைத் தெய்வங்களும், தங்களை ஆட்டுவிப்பதாக நம்பினர்.
கம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II
சென்ற இதழில் (அக்டோபர் 2006) புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை சுட்டிக் காட்டி யிருந்தேன். உண்மையான மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறுபட்ட அல்லது தவறான கருத்துக்களை முன்வைத்த பலவிதமான சித்தாந்தப் போக்குகளை கூர்மையாக அந்த அறிக்கை விமர்சனம் செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். கற்பனாவாத சோசலிசத்திற்கும், விஞ்ஞான சோசலிசத்திற்கும் உள்ள அடிப்படையான வேற்றுமை களை எவ்வாறு மார்க்சும் – ஏங்கெல்சும் விளக்கினார்கள்? என்பதைக் கண்டோம்.
தூணிலும் இருப்பாரா?
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சரித்திரமொன்றைக் கட்டி விட்டார்கள். இது சர்வ வியாபி என்ற கடவுளின் லட்சணத்தைக் குறிக்கும் கதையாகும். வான நூலின் படி பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ளவை தூசும், தும்புமே. இதனைக் கடவுளென்பதில் அர்த்தமில்லை. ஆதலின், கண்டவரையில், கடவுள் சர்வ வியாபி என்று சொல்ல யாதொரு நியாயமுமில்லை. வேதாந்திகள் சொல்லும் சத்து, சித்து, ஆனந்தமும் பிரபஞ்சத்தில் காணோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
