Author: Editorial
உட்கட்சி ஜனநாயகம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை. நமது கட்சி உட்பட, உலகம் முழுவதும் உள்ள மார்க்சிய – லெனினிய கட்சியின் உயிர் வாழ்க்கைக்கும், அதன் அடிப்படையான செயல்பாடுகளுக்கும் அடித்தளமாக விளங்குவது உட்கட்சி ஜனநாயகமே! இத்தகைய ஜனநாயக அடித்தளத்திற்கு உயிராதாரமாக விளங்குவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு. கட்சியின் ஸ்தாபன ரீதியான செயல் பாட்டிற்கு மைய சிந்தனையாக விளங்குவதே ஜனநாயக மத்தியத் துவம். இக்கோட்பாட்டைப் பற்றி கூறும்போது, ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அம்சமாக வர்ணிக்கப்படுகிறது; கூட்டுத் தலைமை, கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாடு என இதன் பரிமாணம் விரிந்து – பரந்துச் செல்கிறது. சுருக்கமாக, செயலில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் என்பது இதன் முக்கியக் கருவாகும்.
இடது முன்னணி அரசும், தொழில் மயமாகும் மேற்கு வங்கமும்
மேற்குவங்கம் தொழில் வளர்ச்சி காணும் சாத்தியக் கூறு தோன்றியிருக்கிறது. எந்தப் பின்னணியில்? ஏகாதிபத்திய உலகமயம், தாராளமயத்தின் தாக்குதல், இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏகாதி பத்திய நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்படுதல், அதன் விளைவாக பாரம்பரிய தொழில்கள் மூடப்படுதல் – ஆகிய இந்தப் பின்னணியில் தான் மேற்கு வங்க மாநிலம் தொழில் வளர்ச்சியினைக் காண வேண்டியிருக்கிறது.
ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்!
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட பின்பும், இதன் தேவை தொடர்வதன் பின்னணி குறித்து சிந்திக்கையில் ஆணாதிக்கப் போக்கு எங்கும் வியாபித் திருந்ததன்றி வேறென்ன என்னும் விடை கிடைக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

