Author: rasindhan
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
பட்ஜெட்டில் எந்த திசைவழியில் தமிழக பொருளாதாரம் செல்லவேண்டும், மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை எது, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் பட்ஜெட் எத்தகைய பங்கு ஆற்ற முடியும் போன்ற கேள்விகள் குறித்து ஆழமான சிந்தனைகள் எதுவும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில ஒதுக்கீட்டு மாற்றங்கள், கவனம் ஈர்க்கும் ஓரிரு சேமநல திட்டங்கள் என்ற வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சவால்கள் பற்றியோ எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாத, ஃபிஸ்கல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, செலவுகளை சுருக்கி எப்படியோ சமாளிப்பது என்ற பாணியில் பட்ஜெட் அமைந்திருப்பதால், மாற்று சிந்தனைகளுக்கு, முனைவுகளுக்கு இடமே தராத, ‘திக்கு தெரியாத காட்டில் பயணம்’ போலவே நிதி அமைச்சர் பயணித்துள்ளார்.
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர் தலைமை தாங்கி நடத்தினார். புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம் நன்கு தெரிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மார்க்சீய சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள்.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும் எழுப்பினர். இருந்தும் அன்றைய தின பங்குச்சந்தை நிலவரங்கள் அரசின் அறிவிப்புகளால் உற்சாகம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
